நெய்வேலி: கூழாங்கற்கள் கடத்திய டிரைவர் கைது

கடலூர் மாவட்டம் நெய்வேலி நகர போலீசார் கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆலடி அடுத்த கள்ளமேடு கிராமத்தில் இருந்து கூழாங்கற்களை லாரியில் கடத்தி வந்த விழுப்புரம் கணேஷ் நகரைச் சேர்ந்த பார்த்திபன் (33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி