நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடக்குத்து, சிறுவத்தூர், எலந்தம்பட்டு, திருவாமூர் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று திமுக சார்பில் 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு முதலமைச்சரின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.