கடலூர் மாவட்டம், வடக்குமேலூர் ஊராட்சியில், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராஜேந்திரன் எம்எல்ஏ, கீழூர், வானதிராயபுரம், வடக்குத்து, புலியூர் மற்றும் கோரணப்பட்டு ஆகிய ஊராட்சிகளுக்கு தலா ஒரு குப்பை அள்ளும் பேட்டரி வாகனம் என மொத்தம் 5 வாகனங்களை வழங்கினார். இந்த நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.