நெய்வேலி: கஞ்சா விற்க முயன்ற 4 பேர் கைது

நெய்வேலி நகர இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார், வடக்கு மேலூர் அருகே விஷ்வா நகரில் சந்தேகத்திற்கிடமான முறையில் கும்பலாக நின்ற 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் இந்திரா நகரைச் சேர்ந்த ஷாக் என்ற சஞ்சய் (23), ரவிக்குமார் (23), அன்பு என்ற அன்புமணி (21), ராஜேந்தர் (21) என்பதும், ஒரு கிலோ 150 கிராம் கஞ்சாவை விற்பனை செய்ய வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்களை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி