நெய்வேலி: தாமிர கம்பிகள் திருடிய 2 பேர் கைது

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தின் 2-வது அனல் மின் நிலைய பொறியாளர் ஞானகுரு, மத்திய பாதுகாப்பு படை வீரர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, தாமிர கம்பிகளை திருட முயன்ற 5 பேரில் 2 பேர் பிடிபட்டனர். மற்ற 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட இருவரையும் நெய்வேலி தெர்மல் போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி