கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் இன்று கொசு மருந்து அடிக்கும் பணி நடைபெற்றது. இப்பகுதியில் கொசுத் தொல்லை அதிகமாக இருப்பதாக எழுந்த புகார்களின் பேரில், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி ஊழியர்கள் இந்த பணிகளை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.