கடலூர் மாவட்டம் மதனகோபாலபுரம் கிராமத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புல மாணவர்கள், ஊரக வேளாண் அனுபவ திட்டத்தின் கீழ் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினர். வேம்பு, கொய்யா, மாதுளை போன்ற பயனுள்ள மரக்கன்றுகளை மாணவர்கள் வழங்கினர். சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.