காடாம்புலியூர்: வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் காந்தி‌நகரைச் சேர்ந்த 75 வயது தொழிலாளி வைரக்கண்ணு, கும்பகோணம் சாலையோரம் உள்ள ஒர்க் ஷாப் அருகில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் வந்த வாகனம் மோதி பலத்த காயமடைந்தார். கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி