கடலூர்: வெளிநாட்டவர் குறித்த தகவல் தெரிவிக்க வேண்டும்‌ - எஸ் பி

கடலூர் மாவட்டத்தில் தங்கியுள்ள வெளிநாட்டினர், அவர்களை திருமணம் செய்து அடைக்கலம் கொடுத்தோர் குறித்த தகவல்களை உடனடியாக எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள அயல் நாட்டினர் பிரிவில் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறுவோர் மீது வெளிநாட்டினர் சட்டம் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஹோட்டல்கள், வீடுகள் மற்றும் விடுதிகளில் தங்கியுள்ள வெளிநாட்டினர் குறித்த விவரங்களை முறையாக பதிவு செய்ய  வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி