இதனால் நெல்லிகொல்லை உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாய பயிர்களுக்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பயிர்கள் தண்ணீர் இன்றி கருகும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து பாசனத்துக்காக என். எல். சி. யில் இருந்து உபரிநீரை உடனே வாய்க்காலில் திறந்து விட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழைக்கொல்லை பகுதியில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், விவசாய பயிர்களை காப்பாற்றும் வகையில் என். எல். சி. யில் இருந்து உபரிநீரை வாய்க்காலில் திறக்க வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில் நெய்வேலி என். எல். சி. டி. ஜி. எம். குமார் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.