ஈச்சங்காடு: மின்சாரம் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் (46) என்ற விவசாயி, நேற்று தனது தென்னந்தோப்பில் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும்போது, தென்னை மட்டை மின் கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி மல்லிகா அளித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி