கடலூர் மாவட்டத்தில் பாதி புதைந்த நிலையில், முகம் சிதைந்த இளம் பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் "தொடர்ச்சியாக நடக்கும் குற்றச்சம்பவங்களைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு ஒன்று இருக்கிறதா இல்லையா என்று மக்களுக்கு சந்தேகம் வருகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அவகாசம் வேண்டுமா? நீங்கள் நேரம் எடுத்து கற்றுக்கொண்டு வந்து சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் வரை தமிழ்நாடு தாங்காது,சிஎம் சார்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.