கடலூர் மாவட்டம் வடலூரில், அரசு புறம்போக்கு நிலத்தில் பொது வழிப்பாதையை சீரமைத்த ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் செல்வராஜை (62) நிலம் தங்களுக்கே சொந்தமெனக் கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக சிவபெருமான், மோகனா, அருண், லட்சுமணன் ஆகிய நால்வர் மீது வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஜனவரி 26ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது. இது குறித்து செல்வராஜ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.