கடலூர் மாவட்டம் வடலூர் மாருதி நகர் பகுதியில் வசித்து வரும் ஸ்டீபன் என்பவரின் வீட்டில், மின் கசிவு காரணமாக தீப்பிடித்து வீடு முழுவதும் தீயில் கருகி நாசமாகி உள்ளது. வடலூர் போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு துறை தகவல் அளித்தது. குறிஞ்சிப்பாடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர் வீட்டில் வைத்திருந்த அனைத்து ஆவணங்களும் அனைத்து பொருட்களும் தீயில் கருகி உள்ளது.