வேனுக்கு முன்னால் சென்ற பஸ் டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். பஸ் மீது வேன் மோதாமல் இருப்பதற்காக வேன் டிரைவர் பிரேக் போட்டுள்ளார். இதில் வேன் நிலைதடுமாறி, தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் திருப்பத்தூரை சேர்ந்த கோவிந்தன் மனைவி லட்சுமி, 53; திருப்பத்துார் அடுத்த கருப்புரை சேர்ந்த விஜயா, 61; பெங்களூரை சேர்ந்த ரகு மனைவி ராதா, 42; இவருடைய மகள் நிவேதா, 20; உட்பட வேனில் பயணம் செய்த 14 பேர் காயமடைந்தனர்.
விபத்தில் காயம் அடைந்தவர்களை போலீசார் உதவியுடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.