குறிஞ்சிப்பாடி அடுத்த பாச்சாரப்பாளையம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (28) மற்றும் ராசாக்குப்பம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (22) ஆகியோர் திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்றபோது, விழப்பள்ளம் பகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருவரும் படுகாயமடைந்து புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.