கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு பாட்டை தெருவில் அமைக்கப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் இறுதி கட்ட பணிகளை நகர மன்ற தலைவர் அண்ணன் சிவக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி பொறியாளர் சிவசங்கரன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்த ஆய்வு, நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டது.