பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நாளை (பிப்ரவரி 15) வடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் இருதய சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை, நுரையீரல் சிகிச்சை, குழந்தைகள் நலம், பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் பொதுமக்களுக்கு அளிக்கப்பட உள்ளன.