வடலூர்: தூக்கில் தொங்கிய ஆண் பிணம்

வடலூர் சத்திய ஞானசபை அருகே உள்ள மரத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த வடலூர் போலீசார், உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி