கடலூர் கிழக்கு மாவட்ட திமுகவின் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிவுகள் குறித்த கள ஆய்வு கூட்டம் இன்று வடலூரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.