வடலூர்: பேருந்து நிலையத்தில் இறந்து கிடந்த முதியவர்

குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் பேருந்து நிலையத்தில் நேற்று 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதைப் பார்த்த பயணிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வடலூர் போலீசார் விரைந்து வந்து, இறந்து கிடந்த முதியவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி