கடலூர் மாவட்டம் வடலூரில், கண் பார்வை பாதிப்புடன் வீட்டில் தனியாக வசித்து வந்த இருதயராஜ் (60) திடீரென மாயமானார். உறவினர்கள் தேடிய நிலையில், நேற்று (மார்ச் 3) வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் அவரது உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. வடலூர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.