வடலூர்: பைக் திருட்டு - போலீசார் விசாரணை

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ராஜா (35) என்பவர், வடலூரில் உள்ள தனியார் நிறுவன அலுவலகத்திற்கு தனது பைக்கில் சென்றார். அலுவலகம் எதிரே பைக்கை நிறுத்திவிட்டு சென்ற அவர், திரும்பி வந்து பார்த்தபோது பைக் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து வடலூர் காவல் நிலையத்தில் ராஜா புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி