வடலூர்: 3½ பவுன் தாலி செயின் பறிப்பு

கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் திருப்பண் ஆழ்வார் தெருவைச் சேர்ந்த மாலதி (69) என்பவர் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபைக்குச் சென்றுவிட்டு தனியார் பேருந்தில் வீடு திரும்பினார். கருங்குழி சந்திப்பில் இறங்கியபோது, கழுத்தில் இருந்த 3½ பவுன் தாலிச் செயின் மாயமானது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 3½ லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. இது குறித்து வடலூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நகை பறிக்கப்பட்டதா என விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி