கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில், 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை மக்களிடமிருந்து கருத்து கேட்டுத் தயாரிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் 'மக்களுக்காக மக்களிடமிருந்து' என்ற இயக்கத்தின் கீழ் பிரச்சார வாகனம் பொதுமக்களிடம் கருத்துக்களைச் சேகரித்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக ஊடகப்பிரிவு மாநில செயலாளர் ஸ்ரீதர், கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் பொன் சதீஷ்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.