கடலூர் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குறிஞ்சிப்பாடி வட்டம் தம்பிப்பேட்டை ஓடை மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அப்பகுதியில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் இல்லாததால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, உடனடியாக மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.