குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற கும்பேஸ்வரர் திருக்கோவிலில் இன்று (ஜன. 10) மார்கழி மாத 26-வது நாளை முன்னிட்டு, ஸ்வாமிக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.