வடலூர் அருகே நர்சிங் மாணவி மாயம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் தென்குத்து புதுநகரைச் சேர்ந்த பி.எஸ்சி நர்சிங் முடித்த சுவேதா (23) என்பவர் வடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பாததால், அவரது தாய் சுபாவதி (43) பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை. இது குறித்து வடலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி