குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தீமித்து நேர்த்திகடன் செலுத்தினர். மேலும், கோவிலில் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.