குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை பாட்டைத்தெருவில் உள்ள ஸ்ரீ மரகதவல்லி அம்மன் உடனுறை காருண்ய ஈஸ்வரர் திருக்கோவிலில் 17 ஆம் ஆண்டு மாசி மாத மஹா சிவராத்திரியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை, வேள்வி பூஜை, மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் விநாயகர், சிவன் பார்வதி, பராசக்தி அம்மன், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி மற்றும் சண்டிகேசுவரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் வாணவேடிக்கையுடன் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது.