குறிஞ்சிப்பாடி அருகே அன்னதானம் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி(35) என்பவர், வெங்கடாம்பேட்டை கிராமத்தில் உள்ள வாழ்முனி கோயிலில் கிடா வெட்டுக்குச் சென்றபோது, உறவினர் மாரியப்பன் மற்றும் அவரது நண்பர்களான துரைப்பாண்டி, மணிமாறன் ஆகியோர் செல்வமணியை ஆபாசமாகத் திட்டி, கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.