குறிஞ்சிப்பாடி அடுத்த வேகாக்கொல்லை அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சுந்தர்ராஜன் (30) என்பவர் திடீரென மாயமானார். அவரது மனைவி கல்பனா (28) அளித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன இத்தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. சுந்தர்ராஜன் மாயமானது குறித்து பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்காததால் கல்பனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.