குறிஞ்சிப்பாடி: திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மீன் மார்க்கெட் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தீமித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதுமட்டுமல்லாமல் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி