குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் தமிழக முதல்வர் புகைப்படத்தை மாட்டச் சொல்லி நிர்வாகிகள் சில தினங்களுக்கு முன்பு மனு அளித்துள்ளனர். அப்போது பேரூராட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கலைஞர் புகைப்படம் எதுவும் மாட்டப்படாமல் இருந்தது. திடீரென முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் கலைஞர் புகைப்படங்கள் மாட்டப்பட்டதால், தமிழக வெற்றி கழக கட்சி நிர்வாகிகள் பேரூராட்சியை முற்றுகையிட்டு, "ஏன் திடீரென இந்த புகைப்படங்களை மாட்டினீர்கள்? அப்போது தமிழக வெற்றி கழகம் ஆட்சியா? திமுக ஆட்சியா?" என்று கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.