குறிஞ்சிப்பாடி: குடிநீரில் வீசும் திடீர் துர்நாற்றம்

கடலூர் மாவட்டம் அயன் குறிஞ்சிப்பாடியில் எம் ஆர் கே பன்னீர்செல்வம் நகரில் 300 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் பேரூராட்சியின் மூலம் மேல்நிலை தேக்கு குடிநீர் தொட்டி கட்டப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் நேற்று மாலை முதல் அப்பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீரில் அதிக அளவு துர்நாற்றம் வீசுவதால் குடிநீர் தொட்டியில் மர்ம பொருள் ஏதோ கலக்கப்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இதனால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு அப்பகுதியில் பொதுமக்கள் தண்ணீர் இன்றி அவதி அடைந்து வருகின்றனர். மேலும் மேல்நிலை நீர்த்தேக்கு தொட்டி திறந்து கிடப்பதால் மர்ம நபர்கள் யாரோ மர்ம பொருளை கலந்திருக்கலாம் என்ற அச்சத்திலும் வீதியிலும் அப்பகுதி மக்கள் உள்ளனர். 

மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக பொதுமக்கள் அச்சத்தை தீர்க்கும் வகையில் குடிநீரில் துர்நாற்றம் ஏற்பட்டதற்கான காரணத்தை விளக்கி மேல்நிலை நீர்த்தேக்கு தொட்டியை சுத்தம் செய்து உடனடியாக பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி