குறிஞ்சிப்பாடி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் எதிரே சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு சாலை சேதமடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால், தினமும் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பு போன்ற பெரும் விபத்துகள் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட மாவட்ட நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.