குறிஞ்சிப்பாடி: வடிகால் வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள அங்கன்வாடி இன்று அதிகாலை பெய்த மழையால் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க வடிகால் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதே போல் குறிஞ்சிப்பாடி ரயிலடி அருகே உள்ள குடியிருப்பு பகுதியிலும் மழைநீர் தேங்கி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி