திமுக அரசை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் மற்றும் பாமக மாநில அமைப்பு செயலாளர் தர்மலிங்கம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.