குறிஞ்சிப்பாடி: சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த சின்னகண்ணாடிதொழுவன்குப்பத்தைச் சேர்ந்த பரமசிவம் நேற்றுமுன்தினம் குறிஞ்சிப்பாடி செல்வதற்காக சைக்கிளில் கடலூர்-விருத்தாசலம் சாலையில் சென்றுகொண்டிருந்தார். தம்பிப்பேட்டை சந்திப்பு அருகே வந்தபோது, பின்னால் வந்த அரசுபேருந்து சைக்கிள் மீது மோதியதில் பலத்தகாயம் அடைந்த பரமசிவம் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின்பேரில் குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்தி