குறிஞ்சிப்பாடி: தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறக்க கோரிக்கை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில், பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி திறப்பு விழா நடந்து பல மாதங்கள் ஆகியும், தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை இன்னும் திறக்கப்படாமல் காட்சிப் பொருளாகவே உள்ளது. இந்தப் புதிய அறையை உடனடியாகத் திறக்க வேண்டும் என தாய்மார்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி