கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற புத்துமாரியம்மன் கோவிலில் நாளை மறுநாள் (ஜூலை 7) திங்கட்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ச.கு. வேலாயுதம் மேல்நிலைப் பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.