குறிஞ்சிப்பாடி உடையார் தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் டிரைவர் கார்த்தி இவருடைய மனைவி லாவண்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கார்த்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குறிஞ்சிப்பாடி காவல் துறையினர் கார்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின்பேரில் குறிஞ்சிப்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.