குறிஞ்சிப்பாடி: பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

குறிஞ்சிப்பாடி அடுத்த ஆடூர் அகரம் பகுதியை சேர்ந்த உமாராணி (50) என்பவர் மண்பாண்டம் செய்யும் தொழில் செய்து வருகிறார். வேலை செய்து கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் முன்விரோதம் காரணமாக தகராறில் ஈடுபட்டு, உமாராணியை ஆபாசமாக திட்டி, தாக்கி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காயமடைந்த உமாராணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் சதீஷ் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி