குறிஞ்சிப்பாடி: காவல் துறைக்கு குவியும் பாராட்டு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகே உள்ள தையல் தொழிலாளர் சங்க தலைவர் அசோக் என்பவரது கடையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனம், செல்போன் மற்றும் வாடிக்கையாளர்களின் சட்டைகள் திருடுபோனது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் கண்டுபிடித்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இந்த துரித நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி