குள்ளஞ்சாவடி: பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மூதாட்டி சாவு

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அடுத்த சிந்தாமணிக்குப்பம் பகுதியை சேர்ந்த 65 வயதான அன்ன மயில், கடந்த 5 மாதங்களாக மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மனநிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், வீட்டில் இருந்த விவசாய பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக குள்ளஞ்சாவடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி