கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோதண்டராமாபுரம் ஊராட்சி கரைமேடு கிராமத்தில் ரூ.77.89 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அறிவுசார் மையம் அமைப்பதற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளைத் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார், அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.