கு. நெல்லிக்குப்பம்: பள்ளியில் ஓப்பன் சேலஞ்ச் கற்றல் மதிப்பீடு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் உள்ள கு. நெல்லிக்குப்பம் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில வாசித்தல் மற்றும் கணித அடிப்படை திறன்களை மதிப்பிடும் 100 நாட்கள் ஓப்பன் சேலஞ்ச் கற்றல் மதிப்பீடு நடைபெற்றது. மதிப்பீட்டு ஆய்வாளராக கன்னித்தமிழ்நாடு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கே. அமுதா, இப்பள்ளியின் தலைமையாசிரியர் பா. அருள்மொழி, உதவி ஆசிரியர்கள் சி. வாசு, கி. சுகுணா ஆகியோர் முன்னிலையில், எஸ்.எம்.சி உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களின் மேற்பார்வையில் இந்த மதிப்பீடு நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி