வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசனம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு ஐப்பசி மாத ஜோதி தரிசனம் மூன்று முறை காண்பிக்கப்பட்டது. இதில் கடலூர் மாவட்டம் மட்டும் இல்லாமல் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் சத்திய ஞான சபை செல்லும் வழியில் உள்ள சித்தி விநாயகர், முருகன் கோவில், கல்பட்டு ஐயா சன்னதியில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி