தமிழ்நாடு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாக குடிமைப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, இன்று கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பார்வதிபுரத்தில் இல்லம் தேடி ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டம் மூலம் பயனாளிகள் தங்கள் வீட்டிலிருந்தபடியே அத்தியாவசியப் பொருட்களைப் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.