கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினம் தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (டிசம்பர் 23) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், சிதம்பரம் காவல் ஆய்வாளர் லட்சுமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் செந்தில்குமார், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் பொட்டா, பண்ருட்டி காவல் ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் திட்டக்குடியில் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.